Monday, October 13, 2008

வீரத்தின் விளை நிலம் ,,, எங்கள் தளபதி


காடுவெட்டி குரு என்கிற வன்னிய சங்கத் தலைவர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி முதலியோரை அவன் இவன் என்று அநாகரிகமாக ஏசிப் பேசியதும், தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கொன்று விடுவோம் என்று மிரட்டிப் பேசியதும், மிரட்டல் வசூல் செய்யத்தான் செய்வோம் என்று அறிவித்துப் பேசியதும் ஒரு சி.டி.யில் பதிவு செய்யப்பட்டு, அதன் விளைவாகவே தி.மு.க. பா.ம.க. கூட்டணி உறவு முறிகிறது என்று சொல்லப்படுவதை நான் நம்பத் தயாராக இல்லை.
குருவின் பேச்சு பொது மேடையில் பேசியது அல்ல. அவர் கட்சிக்குள் பொதுக்குழுவில் பேசியது. பெரும்பாலான கட்சிப் பொதுக் குழுக்களில், செயற்குழுக்களில், கட்சிப் பிரமுகர்களின் தனிப் பேச்சுக்களில் இதை விடக் கேவலமாகவும் ஆபாசமாகவும் ஆணவமாகவும் பேசும் மரபு இருந்து வருகிறது என்பதை பத்திரிகையாளர்கள் அறிவார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க. பொதுக் கூட்ட மேடைகளில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா, எஸ்.எஸ்.சந்திரன் வகையறாக்கள், பொது மக்கள் முன்பாகவே எவ்வளவு ஆபாசமாகவும் அவதூறாகவும் கடந்த 50 வருடங்களாகப் பேசி வந்திருக்கிறார்கள் என்பதை வேறெவரையும் விட, பொது வாழ்க்கையில் 70 வருடங்களாக இருந்து வரும் கலைஞர் கருணாநிதி நன்றாகவே அறிவார்.
பா.ம.க.வில் காடுவெட்டி குரு என்றொரு `முரட்டுப் பிரமுகர்’ இருந்து வருவது ஒன்றும் தி.மு.க.வுக்கும் ஆற்காட்டாருக்கும் கருணாநிதிக்கும் நேற்று காலைதான் தெரிய வந்த விஷயம் அல்ல. இரு கட்சிகளும் உறவு வைப்பதற்கு முன்பும் பின்னரும் தெரிந்த விஷயம்தான். குருவின் பேச்சும் 6 மாதம் பழைய பேச்சு.
குரு போன்ற பிரமுகர்கள் இல்லாத கட்சிகளே இன்று தமிழ்நாட்டில் இல்லை. மதுரையை எடுத்துக் கொள்வோம். சாரி.. நான் அழகிரி பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.அவர் பேசுவதே அபூர்வம். கருணாநிதிக்கு சவாலாக எம்.ஜி.ஆர். 1972ல் புறப்பட்டபோது எம்.ஜி.ஆரின் `உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை ஓட விடமாட்டேன் என்று எதிர் சவால் சொல்லித் தொடை தட்டிப் புறப்பட்ட கழகக் கண்மணி மதுரை முத்து அன்று கலைஞர் கருணாநிதியின் ஆதரவாளர்தான்.
குடும்பச் சண்டைக்காக மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற கும்பல்களை வழிநடத்தியவர்களில், தி.மு.க.வின் நகர மேயர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் வன்முறையில்தான் முடிந்தன.
வன்முறையிலும், அராஜகத்திலும் மிரட்டல் வசூல்களிலும் தமிழகத்தின் அத்தனை பெரிய கட்சிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். `அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்று இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் கடந்த 50 வருடங்களில் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
ஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் தாங்களே நேரடியாக ரவுடித்தனங்களில் இறங்கத் தயங்கினார்கள். காரணம், ஆரம்ப கால அரசியல் தலைவர்கள் பலரும் நிலப்பிரபுத்துவ பின்னணியில் இருந்து வந்தவர்கள். பண்ணையார்கள் அடியாட்களைத்தான் ஏவி விடுவார்களே தவிர, தாங்களே தங்கள் கைகளை அழுக்குப்படுத்திக் கொள்வதில்லை. அதனால்தான் கீழ் வெண்மணியில் விவசாயக்கூலிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் கூட ஒரு நீதிபதி, மிராசுதார் தானே சென்று நெருப்பு வைத்தார் என்பதை நம்ப முடியாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார். நெருப்பு வைக்க ஆளை ஏவினாரா இல்லையா? என்பதைப் பற்றிச் சொல்லவில்லை.
அரசியலில் எழுபதுகளுக்குப் பின்னர், குறிப்பாக சஞ்சய் காந்தி, எம்.ஜி.ஆர். போன்றோரின் வருகைக்குப் பின் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்று, அடியாட்கள் தாங்களே ஏன் தலைவர்களாகிவிடக்கூடாது என்று சிந்திக்கத் தொடங்கியதுதான். இன்று எல்லா கட்சிகளிலும் தாதாக்கள் வெவ்வேறு மட்டங்களில் தலைவர்களாகவே ஆகி இருக்கிறார்கள்.
இதுதான் யதார்த்த நிலை. எனவே ஒரு காடுவெட்டி குருவின் பேச்சு தி.மு.க தலைமையை நிலைகுலையச் செய்துவிட்டது; வருத்தப்படுத்தி விட்டது;வேதனைப்படுத்தி விட்டது என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம்தான். நன்றி..குமுதம் வார இதழ்

நடிகர்களின் மீதான விமர்சனங்கள்மற்ற சி(ப)ல அரசியல்வாதிகளைப்போல் குளிரூட்டப்பட்ட அறையிலே அமர்ந்து கொண்டு, பெரிய பணக்காரர்களோடும், தொழிலதிபர்கள், பண்ணையாளர்களின் ஆதரவோடும் அரசியல் செய்பவரல்ல மருத்துவர். செல்போனை தட்டினால் தேர்தல் செலவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொண்டு வந்து கொட்டப்படும் நிலையும் இல்லை, நீரிழிவு மற்றும் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய அளவிலும் கிராமங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருபவர்தான் மருத்துவர்.அப்படி சுற்றுப்பயணங்கள் சென்றபோது தமிழர்கள் முக்கியமாக இன்றைய இளைஞர்கள் திரைப்படம் என்ற மாயையில் விழுந்து கிடப்பது தெரியவந்தது, ஒரே ஒரு படிப்பகம் கூட இல்லாத குக்கிராமங்களில் கூட அரிதாரம் பூசும் பல நடிகர்களுக்கு ஆரத்தி எடுக்க ரசிகர்மன்றங்கள் இருந்தன, ஒவ்வொரு ஊரிலும் ரஜினி,விஜயகாந்த,கமல்,அஜீத்,விஜய் தற்போது சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர் மன்றங்கள் என குறைந்த பட்சம் 7 ரசிகர்மன்றங்கள் இருக்கும், அருண்குமார் மற்றும் இன்னும் பல நடிகர்களின் மன்றங்களை கணக்கில் சேர்க்கவில்லை.இளைஞர்களின் வாழ்க்கை,பலம் இப்படி வீணாவதை எண்ணித்தான் திரைப்படங்களின் பெயரால் நடிகர்கள் நிசத்தில் போடும் வேடங்களை கலைக்க குரல் கொடுத்தார், அது மாதிரியே திரு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதாவே தொடப்பயந்த ரஜினி என்ற மாயையை உடைத்து அவரின் உண்மை பலத்தை நாட்டுக்கும் புரியவைத்தார்.ரஜினிகாந்த் பற்றிய சுந்தரமூர்த்தியின் பதிவையும், விஜயகாந்த் பற்றிய எனது பதிவையும் கீழ்கண்ட சுட்டிகளில் படியுங்கள்நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா?இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்இந்த மூன்று பதிவுகளும் இவர்களின் முகமூடியை கிழித்தெரியும்...இதற்குமேல் இந்த இருவரைப்பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லைமற்ற எந்த ஊடகத்தையும் விட திரைப்பட ஊடகம் அதிக வலிமை வாய்ந்தது, குழந்தைகளைக்கூட பாதிக்ககூடிய ஊடகம், அப்படிபோடு போடு பாடலை முழுவதுமாக பாடிக்காட்டும் குழந்தையையும், சித்தப்பா விஜய் அங்கிள் சவால் சொல்றாரு என 3 வயது குழந்தையும் கூறும் பொழுது இந்த திரைப்படங்கள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என புரியவில்லையா? அந்த திரைப்படத்திலே சமூக பொறுப்போடும் தமிழ்ப்பற்றோடும் எடுங்கள் என கூறுவதில் என்ன தவறு?கச்சத்தீவை ஏதேதோ காரணம் கூறி இலங்கையிடம் தாரைவார்த்தது இந்தியா, அதனால் இன்றும் மீனவர்கள் படும் துயரங்கள் எத்தனை எத்தனை, அந்த கச்சத்தீவை மீட்கப்போராடி கைதானவர்தான் மருத்துவர், ஈழத்தைப்பற்றி பேசினாலே ஏதோ தேசத்துரோக குற்றம் செய்தது போல விமர்சிக்கும் ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் இன்றுவரை ஈழப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளிப்பவர், புலிகளை ஆதரித்து பேசியதற்காக பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டபோதும் கூட, புலித்தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டுவரவேண்டும் என தீர்மானம் சட்டசபையிலே கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்க திமுக கூட பயந்து பின் வாங்கி நடுநிலை எனக்கூறியது, அப்போது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து தீர்மானத்தை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கான தார்மீக ஆதரவை தெரிவித்தனர், தமிழ் பெயரைச்சொல்லி யாரும் தமிழகத்திலே அரசியல் செய்யமுடியாது, தமிழ்ப்பெயரைச்சொல்லி யாராலும் ஒரு வாக்குகூட கூடுதலாகப்பெறமுடியாது, அந்த காலம் மலையேறிவிட்டது, மருத்துவரின் போராட்டம் தமிழின்,தமிழினத்தின் மீதான பற்றுதலாலொழிய அரசியலால் அல்ல, ஆனால் அவரது தமிழ் போராட்டங்களை கொச்சை படுத்திக்கொண்டுள்ளனர் பலர், இதில் பலருக்கு கர்னாடகவிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் வருபவர்கள் தமிழர்களை இரட்சிக்கப்போவதாக கனவு வேறு.மருத்துவர் இராமதாசு மற்ற அரசியல்வாதிகளைப்போல அன்போடு ஆரத்தழுவுவதுபோல முதுகிலே கத்தியை இறக்குபவர் அல்லர், அடுக்கு மொழியிலே அழகுத்தமிழிலே நயமாக பேசும் அரசியல்வாதியல்ல, கேமராவின் முன்னால் மட்டுமல்லாமல் எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் நடிக்கும் மனிதர்களுக்கிடையில் மனதிற்கு பட்டதை நேரடியாக சொல்லும் குணம் படைத்தவர், ஆதரித்தால் பலமாக ஆதரிப்பதும் எதிர்த்தால் பலமாக எதிர்ப்பதும் இவரது இயல்பு, நாளை இவரோடு கூட்டணி வைத்தால் என்ன செய்வது, இவரை ஆதரித்தால் என்ன செய்வது என எண்ணி பசப்பு மொழிகள் பேசி கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக செயல்படுபவர் அல்ல, இவருடைய பேச்சும்,செயல்களும் அதிரடியாக இருக்கும், இதுதான் இவருடைய மிகப்பெரிய பலம், மிகப்பெரிய பலவீனமும் கூட, இவருடைய இந்த அதிரடிப்பேச்சினால் தான் செல்வி.ஜெயலலிதாவும், திரு.கருணாநிதியும் மோதிப்பார்க்க பயந்த ரஜினியுடன் மோதி ரஜினிக்கு இருந்த மாய பலத்தினை உடைத்தெறிந்தவர், இது தமிழினம் மறுமொரு நடிகரால், வேற்று மாநிலத்தவரால் ஆளப்படாமல் தப்பித்தது, இது மருத்துவர் இராமதாசினால் அடைந்த மிகப்பெரிய பலன். அதிமுகவோடு கூட்டணியைப்பற்றி மருத்துவர் கூறிய கருத்துகள் எமக்கு மிக அதிர்ச்சியை தந்தன.இந்த பேச்சுதான் அவருடைய பலவீனம், ஒரு தேர்ந்த அரசியல்வதிக்கான அரசியல் தந்திரம் (நயவஞ்சகம்?) அவரிடமில்லை, மனதில் பட்டதை நேரம் காலம் தெரியாமல் பேசுவது அவருடைய பலவீனம்.முக்கியமான கேள்விக்கு வருவோம்,ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன....?பத்தாம் வகுப்பு(மெட்ரிக்குலேசன்) மட்டுமே படித்த செல்வி.ஜெயலலிதாவை மாபெரும் படிப்பாளி, அறிவாளி போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஊடகங்கள் MBBS படித்த மருத்தவர் இராமதாசின் மீது ஏற்படுத்திய படிமம் நாம் அறிந்ததே, இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நிறைய உண்மைகள் புரியும், இன்று பத்திரிக்கை ஊடகம் யார் கையில் இருக்கின்றது என அனைவரும் அறிந்ததே. தமிழ் ஊடகங்களும், ஆங்கில மற்றும் தேசிய ஊடகங்களும் முழுக்க முழுக்க உயர்சாதியினரின் கையில் இருக்கின்றது, குமுதம், விகடன், தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என பெரும்பாலான ஊடகங்களும் உயர்சாதியினரின் கையில் உள்ளது, ஏற்கனவே திராவிட கட்சிகளினால் தமிழகத்திலே ராஜரிஷி என்ற பட்டம் பறி போய் கிடக்கின்றது அவர்களுக்கு, இந்த நிலையில் இது என்னடா பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து இன்னுமொரு தலைவர், அவர் பின்னால் பலமானதொரு மக்கள் சக்தி... இப்படியே இவரை விட்டால் தற்போது தம் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் திராவிட கட்சிகளைப்போன்றதொரு பிரச்சினை பா.ம.க விடமும்.. இவர்களையும் வளரவிட்டால் இனி எந்த காலத்திலும் ராஜரிஷிப்பட்டம் என்பது கனவே என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டன, எனவே இப்போதே அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிக்கைகள் வேறெவரையும் விட கண்மூடித்தனமாக பா.ம.கவின் மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதும் தாக்குகின்றன.இதில் ஓரளவு பத்திரிக்கைகள் வெற்றி கண்டுள்ளன.... வன்னிய இனம் தவிர்த்து மற்ற இனத்தினரின் பார்வை இந்த பத்திரிக்கைகளின் பொய்பிரச்சாரத்தால் மாறிக்கிடக்கின்றன.... ஏனெனில் பெரும்பாலானோர் பத்திரிக்கைகளின் வழியாகத்தான் பா.ம.க.வையும் மருத்துவர் இராமதாசுவையும் பார்க்கின்றனர், ஆனால் நாங்களெல்லாம் பாமக வினையும் மருத்துவர் இராமதாசுவையும் பத்திரிக்கை வழியாக பார்க்காமல் அருகிலிருந்து பார்க்கின்றோம்...ஆனால் சிறிது சிறிதாக இந்த நிலை மாறிக்கொண்டு வருகின்றது, எப்போதும் பா.ம.கவையும் மருத்துவரையும் கடுமையாக தாக்கிக்கொண்டுவந்த குமுதமும் விகடனும் தற்போது கண்மூடித்தனமான போக்கை சிறிது மட்டுப்படுத்தியுள்ளன... ஆனால் தினமலர் இன்னும் கண்மூடித்தனமான தாக்குதலை பாமகவின் மீது தொடர்கின்றன...மக்களின் பார்வையும் மாறிக்கொண்டுள்ளது, அவர்களுடைய முதல் சாய்ஸ் ஆக பாமக இல்லையென்றாலும் பா.ம.க வேண்டாமென்ற வெறுப்பு இல்லை.... பாமகவின் மீது உண்மையிலேயே வெறுப்பிருந்தால் கூட்டணியில் இருந்த போதிலும் மற்ற இனத்தவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள், ஆனால் உண்மை என்னவெனில் தேர்தலுக்கு தேர்தல் வன்னிய இனம் தவிர்த்த மற்ற வாக்கு வங்கிகளிலும் பாமக ஊடுறுவிக்கொண்டுள்ளது...பிற அரசியல் தலைவர்களுக்கு மருத்துவரின் மீதான் மிகப்பெரிய எரிச்சல்களுக்கு காரணம்எந்த வித அரசியல், பண பின்புலங்கள் இல்லாமல் பேச்சுத்திறமையில்லாமல், திரைப்பட பின்னனியில்லாமல் மக்களை கவர்ந்திழுக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் இருந்த போது எப்படி இவரின் பின்னால் எப்போதும் பின் வாங்காத, அவரை வெறுக்காத ஒரு மக்கள் சக்தி உள்ளது என்ற பொறாமை....ஆனால் அவருடைய அற்பணிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்1987ல் வன்னியர் சங்க போராட்டத்தின் போது வன்னியர்கள் மீதும் வன்னிய கிராமங்களின் மீதும்கடும் வன்முறைத்தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கத்தால் (எந்த அரசாங்கமாயினும்) இன்று அதே இனத்தின் மீதோ வன்னிய கிராமங்களின் மீதோ கை வைக்கமுடியுமா?? உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது...குடிமக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் கையில் ஆனால் அதே அரசாங்கம் வன்முறை செய்யத்துனிந்தால் யார் காப்பது?? இனி அரச வன்முறை பிரச்சினை வன்னிய இனத்திற்கு இல்லை, ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கும் இல்லை... இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது...எங்கேயோ பெரு நகரங்களில் வாழ்ந்து கொண்டு பா.ம.க. வின் கொடிக்கம்பத்தைக்கூட பார்த்திராமல் பத்திரிக்கைகளின் செய்திகளை வைத்து பா.ம.கவை எடை போடுபவர்கள் அல்ல நாங்கள், பா.ம.க வின் அருகில், மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றோம்...பொதுவாக சொல்லப்போனால் பா.ம.கவின் மீதும் இராமதாசுவின் மீதுமான மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது போல விமர்சிக்காமல் கண்மூடித்தனமாக மிகக்கடுமையான விமர்சனம் செய்வதற்கு காரணம் பொறாமை, இயலாமை, அறியாமை ஆகிய மூன்று ஆமைகள் தான்....உதிரம் சிந்திஉயிர் கொடுத்துபெற்றதிந்தபாதுகாப்புசொந்த நாட்டிலும்சொந்த ஊரிலும்சூறாவளியில்மாட்டியவைக்கோல் போராய்சுற்றி சுற்றிஅடிக்கப்பட்டபோதுசுதந்திரமும் இல்லைஇங்கேமனித உரிமையும்மாய்ந்து விட்டனஇங்கேவாய் கிழியஊலமிடும்பத்திரிக்கைகளும்இன்றுவாய் கிழியஊலமிடும்பத்திரிக்கைகளும்அன்றுபதறித்துடித்தபோதுபதுங்கிவிட்டனபத்திரிக்கை தர்மம்தன்னைபரணில் தூக்கிப்போட்டுபத்திரிக்கை தர்மம்தன்னைபரணில் தூக்கிப்போட்டுஎப்போதடா வாய்ப்புகிடைக்கும்வாய்ப்பூட்ட போடலாம்என காத்திருக்கும்கழுகுகளேஉம் வாயில் மொத்தமும்மண் தான்...பார்வைகள் மாறுகின்றன...பார்ப்பவர்களும் மாறுகின்றனர்...காலங்கள் மாறுகின்றன...காட்சிகளும் மாறுகின்றன...பார்வைகள் மாறிபாராளும் காலம்போய்...பாராளும் காலத்தில்பார்வைகள் மாறுகின்றன...ஒரே இரவில்உயர்வு தேடநாங்கள் ஒன்றும்அது... அல்லஒரே இரவில்காட்சி மாறஇது ஒன்றும்கனவு தொழிற்சாலைஅல்லகாலங்கள் மாறுகின்றன...காட்சிகளும் மாறுகின்றன...மொத்தமும் மாறகாத்திருக்கின்றோம்நாங்கள்அதுவரை வரும்தீய்ந்தவாசனைகளுக்குபதில் தரஅலுத்துப்போய்...மொத்தமும் மாறகாத்திருக்கின்றோம்நாங்கள்உயிர் ஈந்து எங்களை வாழ வைத்த தியாகிகளின் பாதம் தொட்டு இந்த பதிவுகளை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்... நன்றி குழலி

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள்-ஒரு அலசல் 3


மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள்-ஒரு அலசல்- 3
இந்த பதிவில் இராமதாசுவின் வாரிசு அரசியல் பற்றிஅலசுவோம். இதே தலைப்பில் இதற்கு முந்தையபதிவுகளின் சுட்டி இங்கே.இதுவரை அதை படிக்காதவர்கள் அதைபடித்துவிட்டு வரவும்.அலசல் - 1ஒரு அலசல் - 2இடைக்குறிப்புஇந்த பதிவுகள் இராமதாசுக்கு புனிதர் பட்டம் கட்டவோஅல்லது அவர் செய்வது செய்தது எல்லாம் சரியெனவக்காலத்து வாங்கவோ எழுதப்படுவது இல்லை.வேறு எந்த அரசியல் தலைவர் மீதும் நடத்தப்படாததிட்டமிட்ட ஒரு ஊடக வன்முறை பாமகவின் மீதும்இராமதாசுவின் மீதும் நடத்தப்படுகிறதுஅது ஏன் என்பதற்காகத்தான் இந்த அலசல்வாரிசு அரசியல்மருத்துவர் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுமகனை மத்திய அமைச்சராக்கியது.இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறும் முன் சற்று கடந்த காலநிகழ்வுகளையும் நினைவு படுத்த வேண்டும்.எம்.ஜி.ஆர்,அன்பழகன்,நெடுஞ்செழியன் இன்னும்பல மக்கள் செல்வாக்கு படைத்த அடுத்தநிலைதலைவர்கள் இருக்கும் போதே மு.க.முத்து என்றதனது மகனை அரசியல் வாரிசாக புகுத்தினார்திரு.கருணாநிதி, அதனால் திமுக வே பிளவுபட்டதுஅதன் பிறகு வைகோ என்ற மக்கள்,தொண்டர்கள்செல்வாக்கு பெற்ற அடுத்த கட்ட தலைவர் இருக்கும் போதுமு.க.ஸ்டாலின் என்ற அடுத்த மகனை வாரிசாக்கினார்அதனால் மீண்டும் ஒருமுறை பிளவுபட்டது அந்த இயக்கம்,எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறிய போதுஒரு மாவட்ட செயளாளர் கூட அவருடம் செல்லவில்லை,ஆனால் வைகோ வெளியேறியபோது 8 மாவட்டசெயலாளர்கள்அவருடன் வேளியேறினர் இதிலிருந்தே வைகோ அடுத்த தலைவர் பதவிக்கு மனதளவில்தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார் என புரிகிறது.ஆனால் இப்படிபட்ட அடுத்தகட்ட தலைவர்கள் பாமகவில் இல்லை. அரசியல் வாரிசை அடையாளம் காட்டாமல் போனால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த இயக்கம் பிளவுபட்டு அழிந்துவிடும் (அதை தான் பாமகவிலும் நடக்க வேண்டும் என பலர் கனவுகான்கின்றனர்)எப்படிப்பட்ட நிலையில் அன்புமணி அரசியலுக்கு வந்தார்?மருத்துவர் இராமதாசின் முதுகைப்பார்த்தால் அதில் எதிரிகளால் வாங்கிய குத்துக்களைவிட சொந்த கட்சியின் தலைவர்களால் வாங்கிய குத்துகளே அதிகம்.1995 என எண்ணுகிறேன் பண்ருட்டி இராமச்சந்திரனையும் தனக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார், மருத்துவர் இருக்கும்போதே பாமகவை கைப்பற்ற என்னி1995லே பாமாகவை பிளந்தார், அது மருத்துவரின் முதுகிலே சொந்த கட்சிகாரரால் வாங்கிய முதல் குத்து 1998 வரை பாமகவில் இராமதாசுவிற்கு அடுத்த நிலையில் இருந்தவர் பேராசிரியர் தீரன்.(இவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை, இவருக்கென்று அல்ல பாமகவில் எல்லாமே மருத்துவர்தான் அவர்பின்தான் வன்னிய இனம் வேறு யார் பின்னும் இல்லை), அடுத்த அரசியல் வாரிசாக மருத்துவரால் அடையாளம் காட்டப்பட்டவர்.பேராசிரியர் தீரனுக்காக பல செயல் தளபதிகளை இழந்தார் மருத்துவர், அதிமுக விற்கு ஒரு ஆண்டிப்பட்டி தொகுதி மாதிரி, பாமகவிற்கு ஒரு ஆண்டிமடம் தொகுதி, 1991 தேர்தலிலே ராஜீவ் படுகொலை அலையிலும் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலே தான் தோல்வியடைந்தது பாமக. அந்த தொகுதியை பாமகவின் கோட்டையாக மாற்றியது ஞானமூர்த்தி என்ற பிரமுகர், அவருடைய உழைப்பாலும்,பெரும்பான்மையாக இருந்த வன்னியமக்களாலும் ஆண்டிமடம் பாமகவின் நிச்சய வெற்றி தொகுதி.எந்த கூட்டணியும் இல்லாமல் 1996 தேர்தலை சந்தித்தபோது பேராசிரியர் தீரன் வெற்றிபெறவேண்டும் என தொண்டர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையில் திரு.ஞானமூர்த்தியை குறிஞ்சிப்பாடி தொகுதிக்குமாற்றிவிட்டு திரு.தீரன் அவர்களை ஆண்டிமடத்திலே போட்டியிடச்செய்து சட்டமன்ற உறுப்பினராக்கினார், இதனால் ஞானமூர்த்தி என்கிற செயல் தளபதியை இழந்தார், இன்றும் தன் சொந்த செல்வாக்கினால் ஆண்டிமடத்திலே ஒரு முக்கிய அரசியல் புள்ளியக உள்ளார் திரு.ஞானமூர்த்தி.1998ம் ஆண்டு தேர்தலிலே அதிமுக வோடு கூட்டணி வைப்பதை எதிர்த்து கட்சியை உடைத்தார் பேராசிரியர் தீரன். அது வெளியே சொல்லப்பட்ட காரணம், உண்மையான காரணகர்த்தா அப்போது முதல்வராயிருந்தவர், கைமாறிய பணம்(பணம் பற்றி சொல்வழிக்கேள்வி,பத்திரிக்கை செய்திகள் மட்டுமே, ஆதாரம் இல்லை எம்மிடம்) . பேராசிரியர் தீரனால் மருத்துவரின் முதுகில் இரண்டாவது குத்து.அதன்பின் தலித்.இரா.எழில்மலை. முதல்முறையாக மத்திய அமைச்சர் பதவி கிடைத்தபோது இவருக்குத்தான் வழங்கப்பட்டது, தீரனுக்குப்பின் இவர்தான் மருத்துவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்,இவர் பாமகவின் சர்பாக அமைச்சரானவர், ஆனால் வேறுவிதமாக செயல்பட்டார் (இதைப்பற்றி இன்னும் விரிவாக சொல்லவிரும்பவில்லை) இவருக்கு 1999 தேர்தலிலே போட்டியிட அனுமதிக்கப்படவில்லை, தலைமைக்கும் இவருக்கும் கருத்துவேறுபாடு, அதனால் என்ன அமைச்சராக்கிய கட்சியை விட்டு ஓடவேண்டுமா என்ன? ஆனால் அதிமுகவிற்கு ஓட்டமெடுத்தார். இது மூன்றாவதாக முதுகில் விழுந்த குத்து.திரு.முருகவேல் தென் மாவட்டத்திலே செயல்திறன் மிக்க ஒரு தலித் தலைவர்,2001 தேர்தலிலே அவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்க வேண்டுமென பலமில்லாத தென் மாவட்டத்திலிருந்து அவரை வடமாவட்டத்திலுள்ள வந்தவாசி தொகுதியிலே நிறுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். சிவகாமி என்ற மற்றொரு ச.ம.உ. இவரும் வன்னிய சமுதாயத்தவர் அல்ல ஆனால் இவரும் கட்சியை விட்டு விலகி அதிமுகவிலே சேர்ந்துவிட்டார்,இப்போதும் பாமகவினால் கிடைத்த ச.ம.உ. பதவியை உதறாமல்.எத்தனை எத்தனை குத்துகள் முதுகிலே... அடுத்த தலைவராக அடையாளம் காட்டியபோதும் மருத்துவர் இராமதாசு இருக்கும் போதே கட்சியை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென அத்தனை பேரும் நினைத்தது வேதனை. திரு.பண்ருட்டியார், திரு.தீரன், திரு.தலித்.இரா.எழில்மலைக்கு பிறகு கட்சியில் அனைவருக்கும் அறிமுகமானவர் யாரும் இல்லை. மிகப்பெரிய வெற்றிடம், யாரை வாரிசாக்குவது?இப்பொழுது திரு.வீரபாண்டி ஆறுமுகத்தையோ, திரு.ஆற்காடு வீராசாமியையோ, திரு.கோ.சி.மணியையோ அல்லது திரு.பொன்முடியை யோ திமுகவின் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினால் எத்தனை திமுகவினர் ஏற்றுக்கொள்வர், இதுவே வைகோ அடையாளம் காட்டப்பட்டிருந்தால் நிச்சயம் பிரச்சினை இல்லை, வைகோபோல் செல்வாக்குபெற்ற அடுத்த நிலை தலைவர் இல்லை, யாரையேனும் அரசியல்வாரிசாக காட்டினால் கட்சியில் வீண்குழப்பம். தாமாக விலே மூப்பனாருக்குப்பின் பீட்டர் அல்போன்சோ, சோபா வோ, ஜெயந்தி நடராசனோ தலைவராயிருந்தால் அடுத்தவர்கள் விட்டிருப்பார்களா? கட்சியே இல்லாமல் போயிருக்கும் அதே சமயம் அரசியல் வாரிசை அடையாளம் காட்டவில்லையென்றால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த கட்சி சிதறிவிடும், பலரின் துரோகத்திற்குப்பின் இராமதாசு எடுத்த முடிவுதான் அன்புமணியின் அரசியல் அடையாளம் இதற்கு பாமகவின் 2ம் நிலைத்தலைவர்கள் ஆதரவும் உண்டு, அது சரி இதை எப்படி வன்னிய இனம் ஏற்றுக்கொண்டது, அன்புமணியின் அரசியல் பிரவேசத்தை வைத்து ஒரு பிரச்சினை உருவாகி அதனால் பாமக என்ற அரசியல் கட்சி சிதறி அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அரசியல் வலிமையை, அரசியல் அங்கீகாரத்தை இழக்கத்தயாராக இல்லை வன்னிய இனம்.இது நன்றாகவே புரிந்தும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு பாமக அழியாத என ஏங்கிக்கொண்டுள்ளனர் பத்திரிக்கைகளும் இன்னும் பலரும், முகவை,ஜெஜெவை, மூப்பனாரை,காங்கிரசை, பாஜக வை எல்லாம் அரசியல் வாரிசுப்பிரச்சினையை விமர்சிக்கும் போது மென்மையாகவும், பாமகவின் அரசியல் வாரிசுப்பிரச்சினையை விமர்சிக்கும்போது கடுமையும் காட்டுவது பாமக இதனாலாவது பலம் இழக்காதா என்றுதான்பாமகவின் மீது பூசப்பட்ட வன்முறை பெயரை அழிக்கத்தான் பாராளுமன்றத்துக்கு படித்தவாராக, செயல், நிர்வாகத்திறன் மிக்கவர்களாக நிறுத்துகின்றனர், கட்சிக்காக உழைத்தவர்களை சட்டமன்றத்தேர்தலில் நிறுத்துகின்றனர் இது மருத்துவரின் முடிவு.பாண்டி உறுப்பினர் பேராசிரியர் ராமதாசு, திண்டிவனம் உறுப்பினர் தன்ராஜ் ஒரு பேராசிரியர், சிதம்பரத்திலிருந்து டாக்டர்.பொன்னுசாமி, வேலு முன்னாள் இ.ஆ.ப. இது அத்தனை யும் பாமகவின் இமேஜை உயர்த்துவதற்குத்தான்.ஏ.கே.மூர்த்தி மருத்துவரின் பாதுகாப்பு படையிலிருந்த பாமகவின் அடிமட்டத்தொண்டர், அவர் அமைச்சராகவில்லையா? எந்தவித அரசியல் பின்புலனோ, மருத்துவரின் சொந்தக்காரரோ இல்லத தி.வேல்முருகன் பன்ருட்டி சட்டமன்ற உறுப்பினராகவோ இல்லையா? இப்படி இன்னும் பலர் உள்ளனர், எனவே மருத்துவரின் சொந்தங்களுக்கு தான் பாமக என்று புலம்புவதை எங்களை மாற்றாது ஏனைன்றால் பாமகவை நாங்கள் பத்திரிகை வாயிலாக அறிவதில்லை, உள்ளிருந்து அறிகின்றோம்.எதற்கெடுத்தாலும் அன்புமணி தேர்தலில் நிற்காமல் மந்திரியாகிவிட்டார் என புலம்புபவர்கள் சற்று சிந்தியுங்கள் முகம் தெரியாத வேலு, தங்கராஜ் ஆகியோரெல்லாம் பாமகவின் சார்பிலே நிறுத்தப்பட்டு வெற்றி பெரும்போது அடுத்த வாரிசாக அடையாளம் காட்டப்பட்டு, இராமதாசுக்கு அடுத்தபடியாக கட்சியிலே செல்வாக்காக இருக்கும் அன்புமணிக்கா தேர்தலிலே வெற்றிபெறுவது சிரமம். அன்புமணிக்கு என்றால் மேல்சபை சீட்டு தருகிறோம் மற்றவர்க்கெல்லாம் தரமுடியாது என திமுக சொன்னது, அது மட்டுமில்லாமல் அன்புமணி தேர்தலிலே நின்றால் மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்வது யார்? மருத்துவருக்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்த முகம் அன்புமணிதான்.அன்புமணியின் அரசியல் பிரவேசத்தை வைத்து ஒரு பிரச்சினை உருவாகி அதனால் பாமக என்ற அரசியல் கட்சி சிதறி அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அரசியல் வலிமையை, அரசியல் அங்கீகாரத்தை இழக்கத்தயாராக இல்லை வன்னிய இனம்.உங்களது விமர்சனங்கள் கேள்விகள் வரவேற்க்கப்படுகின்றன, இன்னும் ஒன்று (அ) இரண்டு பதிவுகள் மட்டுமே இதைப்பற்றி எழுதலாம் என உள்ளேன்.

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2


மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2
இந்த தலைப்பின் முந்தைய பதிவிற்கான சுட்டி இங்கே மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1இந்த பதிவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி பார்ப்போம்.பாமக 1989 ம் ஆண்டு மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்டது.அவருக்கு தோளோடு தோள்நின்று இந்த கட்சியை உருவாக்கியவர்கள் பலர்,இதில் தலித் சமுதாயத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன், தலித் எழில்மலை ஆகியோர் முக்கியமானவர்கள். பாமகவின் கொள்கைகள் சட்டதிட்டங்கள் எல்லாம் முன்னாள் நீதிபதி,முன்னாள் இ.ஆ.ப (IAS) அதிகாரிகள் மற்றும் பல கற்றறிந்த பெரியவர்களாள் உருவாக்கப்பட்டது.பாமகவின் கொள்கைகள் என்ன?கம்யூனிசத்தின் சிறந்த அம்சங்கள், சோஷலிசத்தின் முக்கிய அம்சங்கள், பெரியாரின் திராவிட கொள்கைகளில் சில, டாக்டர் அம்பேத்கார் அவர்களின் கொள்கைகள் என அனைத்து முக்கிய இசங்களிலிருந்தும் சிறந்தவைகள் கலந்த கலவைதான் பாமகவின் கொள்கை.பாமக ஒரு வன்னியர் கட்சியா?நிச்சயமாக இல்லை, பாமகவின் சட்டதிட்டங்களிலும் சரி கொள்கைகளிலும் சரி ஒரே ஒரு இடத்தில் கூட வன்னிய சமுதாயத்தின் பெயரோ வன்னியர்களுக்காக என்றோ குறிப்பிடப்படவில்லை, அதன் தொடக்க காலத்தில் பல மேல்மட்ட தலைவர்கள் தலித்,நாடார்,முசுலீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், இன்றும் கூட பல வன்னியரல்லாதோர் பாமகவில் கட்சி பொறுப்பிலும், சட்டமன்ற,பாராளமன்ற உறுப்பினராகவும்,ஏன் மத்திய அமைச்சராகவும் கூட இருக்கின்றனரே, பிறகெப்படி இது வன்னியர் கட்சி என முத்திரை குத்தப்பட்டது, அங்கேதான் நமது தமிழ் பத்திரிக்கை ஊடகம் விளையாடிவிட்டது, இது பற்றி விரிவாக இன்னொரு பத்தியில் பார்ப்போம்.பாமக கொடியிலே உள்ள நீல நிறம் தலித் சமுதாயத்தையும், மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும், சிவப்பு கம்யூனிசத்தையும் குறிப்பவை.பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் திமுகவும், காங்கிரசும் தான். வன்னியர்களின் வாக்கு வங்கி திமுகவிடமும்,காங்கிரசிடமும் இருந்தது, ஆனால் பாமக கிட்டத்தட்ட மொத்தமாக அந்த வாக்குவங்கியை தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுகவிற்கு அந்த கோபம் இன்னும் இருக்கின்றது, அதுவும் இல்லாமல் இட ஒதுக்கீட்டில் உயிரை கொடுத்து போராடியது வன்னிய இனம் ஆனால் இன்னும் 108 சாதியையும் பட்டியலில் இனைத்தது திமுக அரசாங்கம் அந்த கோபமும் கருணாநிதி அவர்கள் ராசதந்திரமாக நினைத்துக்கொண்டு 1996 தேர்தலிலே செய்த கூட்டணி துரோகமும் இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது. திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்.பாமகவின் முதல் தேர்தல் களம்1989 ம் ஆண்டு கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது. தனித்தும் போட்டியிட்டது, தருமபுரி,திண்டிவனம்,சிதம்பரம் தொகுதிகளிலே இரண்டாம் இடம், அதுவும் தருமபுரியிலே 10,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி, கடலூரிலே 95,000 வாக்குகள், இன்னும் பல தொகுதிகளிலே ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முதல் தேர்தலிலேயே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் மாநில கட்சி என தேர்தல ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது.பிற தேர்தல்கள்1991 சட்டமன்ற தேர்தல் வெற்றி -1,இரண்டாமிடம் 12,இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் - 21 பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் - 60கூட்டணி - இல்லைஅலை - ராஜீவ் காந்தி படுகொலை1996 சட்டமன்ற தேர்தல் வெற்றி -4,இரண்டாமிடம் 7,இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் - 16 பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் - 35கூட்டணி - இல்லைஅலை - ஜெயலலிதா எதிர்ப்பு1998 பாராளுமன்ற தேர்தல் வெற்றி -4,போட்டியிட்டது - 5இரண்டாமிடம் 1,கூட்டணி - அதிமுக,பாஜக,மதிமுகஅலை - இல்லை1999 பாராளுமன்ற தேர்தல் வெற்றி -5,போட்டியிட்டது - 8,இரண்டாமிடம் - 3,கூட்டணி - திமுக,பாஜக,மதிமுகஅலை - இல்லை2001 சட்டமன்ற தேர்தல்வெற்றி -22,போட்டியிட்டது - 27,இரண்டாமிடம் - 5,கூட்டணி - அதிமுக,காங்கிரஸ்அலை - இல்லை2004 பாராளுமன்ற தேர்தல் வெற்றி -6,போட்டியிட்டது - 6,இரண்டாமிடம் - 0,கூட்டணி - திமுக,காங்கிரஸ்,மதிமுகஅலை - இல்லைதேர்தல் பாதையை பார்க்கும் போது எந்த கூட்டணியில் பாமக இருக்கின்றதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது.இனி நேரடியாக விடயத்துக்கு வருவோம்மருத்துவர் இராமதாசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி அலசுவோம்தலித் விரோதம்தலித் இனத்தின் மீது எப்போதும் மருத்துவர் விரோதம் காட்டியதில்லை, சில வன்னிய இனத்தை சேர்ந்தவர்கள் காட்டியிருக்கின்றனரே தவிர மருத்துவர் காட்டியதில்லை. பாமகவின் பொதுச்செயலாலர் பதவி தலித் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என பாமகவிலே சட்டமே உண்டுபாமக ஆட்சி கட்டில் ஏறினால் ஒரு தலித்தை முதல்வராக்குவதாக சபதம் செய்துள்ளதுமுதன் முதலில் மத்திய அமைச்சர் அதுவும் ஒரே ஒரு பதவி பாமகவிற்கு கிடைத்த போது அது கொடுக்கப்பட்டது வன்னியருக்கல்ல தலித்.இரா.எழில்மலைக்கு, அதன் பின் டாக்டர்.பொன்னுசாமி அமைச்சராக இருந்தார்.தமிழ்குடிதாங்கி என்ற பெயர் புரட்சிகலைஞர்,சூப்பர்ஸ்டார்,இளையதளபதி போல் தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயரல்ல,குடிதாங்கி என்ற ஊரிலே தன் சொந்த சாதி மக்களை எதிர்த்து தலித் இனத்திற்காக போராடியதால் திருமாவளவன் என்ற தலித்தலைவரால் சூட்டப்பட்டப்பெயர்தான்.1987லே வன்னியர்களின் போராட்டத்தை தடுக்க சாதித்தீ கொளுத்திவிடப்பட்டு எச்சங்களும் மிச்சங்களுமாக அமைதியை குலைத்த நாட்களிலே தலித் சமுதாயத்திலும் வன்னிய சமுதாயத்திலும் மாறி மாறி படுகொலைகள் நடந்தேறின. அப்படி ஒரு சில தலித்களால் படுகொலைசெய்யப்பட்டவரின் இறுதிச்சடங்களிலே நான் கலந்து கொண்டபோது மருத்துவர் இராமதாசு துக்கம் விசாரிக்க வருவதாக தகவல் வந்தது, அப்போது அங்கு கூடியிருந்த பலர் ஆமா இவரு வந்து என்ன சொல்லுவாரு பொறுமையாயிருங்க பேசித்தீர்க்கலாம்னு தான் சொல்வாரு, வேற என்ன சொல்வாரு என்பதிலிருந்தே தலித் சமுதாயத்தோடு மோதல் போக்கை அவர் விரும்பவில்லை.வடதமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் சமுதாயங்கள் அரசியலில் ஒன்று சேர்ந்தால் வேறு எந்த கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலாத நிலை, இரண்டு அடித்தட்டு சமுதாயங்களின் ஒற்றுமை மற்று அரசியல் எழுச்சிக்காக கணக்கிட்டு அரசியல் நடத்தி வருகின்றார்தலித் இனத்தவருக்கு வட தமிழ்நாட்டிலே சரியான தலைவர் இல்லாதபோது மதுரையிலிருந்த திருமாவளவனை வட மாவட்ட மக்களுக்கு அறிமுகப்படுத்தியதே மருத்துவர்தான்.கொள்கையற்ற கூட்டணித்தாவல்முதலிலேயே ஒரு கேள்வி திமுக , அதிமுக வோடு மாறி மாறி கூட்டணி வைத்துகொள்கிறார் என்று குற்றம் சாட்டுபவர் எவரும் ஏன் திமுகவும் அதிமுகவும் கூட்டணியில் சேர்த்துக்கொள்கின்றன, ஏன் திமுக,அதிமுகவை கொள்கையற்ற கூட்டணி என தாக்குவதில்லை, அதுவும் மருத்துவர் இராமதாசை தாக்கும் அளவுக்கு தாக்குவதில்லைஏன் கொள்கை கொள்கையென பேசியபோது கொள்கை பிடிப்போடு இருந்தபோது இந்த பத்திரிக்கைகளும் இன்று அவர்மீது மட்டையடிப்பவர்களும் பாராட்டினர்களா? இல்லையே எழுத்தாளர்களிலே ஞானியையும் பத்திரிக்கைகளிலே நக்கீரனைத்தவிர மற்ற அனைவரும் இடித்துரைப்பதேயேதான் தொழிலாக வைத்துள்ளனர்.1996 தேர்தலுக்குமுன் செல்வி.ஜெயலலிதா ஆட்சியின்போது 7 கட்சி கூட்டனியை உருவாக்கி அதன் சார்பாக திண்டிவனத்திலே மாநாடும் போட்டு அப்போது அடுத்த முதல்வர் கருணாநிதி தான் என உரக்க கூறியவர் மருத்துவர், ஆனால் அந்த சமயத்திலே கூட்டணியிலிருந்து துரத்தப்பட்டார்.அப்போதும் தனியாக நின்று 4 தொகுதிகளிலே வென்றனர், ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுகள் சிதறக்கூடாது என உதயசூரியனுக்கு ஓட்டே போடாதா வன்னிய இனப்பெண்கள் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்தனர். இது பாமக வை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது மாநிலகட்சி என்கின்ற தகுதி இழப்பும் யானைசின்ன இழப்பும் நடந்தது.1998 நாடாளுமன்ற தேர்தல், திமுக,அதிமுக இரண்டோடும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம், ஆனாலும் திமுகவோடு கூட்டணி காண விரும்புகிறோம். மாநில கட்சி தகுதி பெற குறைந்தது 2 பாராளுமன்ற தொகுதியிலே வெற்றி பெற வேண்டும், ஆணால் திமுகவோ ஒரே ஒரு தொகுதி மட்டுமே தரமுடியும் என கேவலப்ப்டுத்தியது. இங்கே தான் கருணாநிதியன் ராசதந்திரம் எம்.ஜி.ஆர் க்கு அடுத்தப்டியாக இராமதாசுவிடமும் அடிவாங்கியது.இதே போல் மீண்டும் 2001 சட்டசபைதேர்தலிலே பாமக வை கழற்றிவிட்டு திமுக தோற்றது, அந்த பாடங்கள் தான் இப்போது கூட்டணியை சிதறவிடாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளார்.கூட்டணி மாற்றத்திற்காக கொள்கை அளவில் எதையும் பாமக விட்டுத்தரவில்லை, பிற்படுத்தப்பட்ட சமுதாய முன்னேற்றத்தை விட்டுத்தந்தனரா? தமிழ் மொழி,சமுதாய வளர்ச்சியை விட்டுதந்தனரா?பாமகவை தாக்குபவர்கள் திமுக,அதிமுக,பாஜக,காங். எல்லாம் எக்காலத்திலும் ஒரே கூட்டணியில் இருப்பதாக எண்ணுகின்றனரோ?அடுத்தபதிவில் வாரிசு அரசியல், திரைப்படங்கள் மீதான தாக்குதல், ரஜினி விஜயகாந்த் விவகாரம் மற்றும் பதிவின் தலைப்பை பற்றிய கருத்தை பார்ப்போம்அடுத்த பகுதிக்கான சுட்டி இங்கேமருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 3

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள்..


யார் இந்த இராமதாசு? இவரின் பின்புலம் என்ன?எப்படி இவர் தமிழக அரசியலிலே ஒரு முக்கிய புள்ளியாக உள்ளார்? எப்படி இந்த மனிதனுக்கு இவ்வளவு அரசியல் செல்வாக்கு?இவரையும் பின்பற்ற, இவர் சொல்வதையும் கேட்க எப்படி பல லட்சம் பேர் உள்ளனர்? இராமதாசுவின் பின் புலம் வன்னிய சமுதாய மக்கள் தான்.இது எல்லோரும் அறிந்ததுதான். அது எப்படி ஒரு சமுதாயமே கண்மூடித்தனமாக இவரை பின் பற்றுகிறது. (இதுதான் பலரின் வயிற்றெரிச்சலுக்கு காரணம், இதுவேதானமருத்துவர் இராமதாசு மீது சொல்லடியாக விழுகிறது).முக்கியமான ஒரு தகவல், பலராலும் இதுவரை தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட விடயம், வட மாவட்டங்களிலே வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாகவோ, நிலக்கிழார்களாகவோ இல்லை, பெரும்பாலானோர் ரெட்டியார்,முதலியார் (அ) உடையார், நாயுடு சமுதாயத்தினரின் நிலங்களில் கூலி வேலை செய்தவர்களே. எனவே பெரும்பாலான வன்னிய சமுதாயத்தினர் பண வசதிபடைத்தவர்கள் அல்ல, ஆதிக்க சாதியாகவும் இல்லை, சமுதாயம் நலிவடைந்த நிலையிலேதான் இருந்தது.சில தசம(பத்து) ஆண்டுகளுக்கு முன் வரை எந்தவித விழிப்புமின்றி பொருளாதாரம், அரசியல், கல்வி என அனைத்திலும் நலிவடைந்தே இருந்தது இச்சமூகம். இந்த சமயங்களிலே தென் தமிழகத்திலே பெரும் எண்ணிக்கையிலிருந்த முக்குலத்தோர் சமூகத்தினர் காங்கிரசிலும் பின் திராவிட கட்சிகளிலும் கோலோச்சினர், ஆனால் வட தமிழகத்தில் வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தாலும் ரெட்டியார்,உடையார் (முதலியார்) சமுதாயத்தினர் கையில் தான் அரசியல் இருந்தது.பெரும் எண்ணிக்கையிலிருந்தும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றமின்றி இருந்த சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தில் திரு.இராமசாமி படையாட்சி அவர்கள் உழவர் உழைப்பாளர் கட்சி என ஆரம்பித்து தேர்தலிலே போட்டியிட்டனர், தென்னாற்காடு மாவட்டத்திலே 18ல் 17 தொகுதிகளிளை வென்றனர் யாருடைய கூட்டணியுமில்லாமல் அப்போது முதுபெரும் தலைவர் காமராசர் அவர்கள் காங்கிரஸ் தலைவர்.அப்போதே வன்னிய சமூகம் மாற்றத்துக்கு தயாராக இருந்தது, சரியான வழிகாட்டுதலுக்காகவும், தலைவனுக்காகவும் ஏங்குவது புரிந்தது. அதன் பின் காமராசர் அவர்கள் இராமசாமி படையாட்சி அவர்களிடம் பேசி காங்கிரசில் சேரச்செய்தார், இராமசாமி அவர்களுக்கு மந்திரி பதவியும் அளித்தார், ஆனால் காங்கிரஸ் என்ற சமுத்திரத்திலே கலந்த சிறு ஓடையாகிவிட்டது.அதன் பின் திரு இராமசாமி படையாட்சியார் மீதிருந்த பேரன்பினாலும் பெரு மதிப்பினாலும் காங்கிரசை எதிர்த்து சமுதாய முன்னேற்றம் என யாரும் பேசவில்லை.அவரது கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் அதே இழிநிலை. இந்த நிலையில் தான் 80 களின் தொடக்கத்திலே திரு ஏ.கே.நடராசன் என்பவரால் வன்னியர் சங்கம் மீண்டும் உத்வேகம் பிடித்தது. அப்போது திண்டிவனம் பொறுப்பாளராக இருந்தவர்தான் மருத்துவர் இராமதாசு, திரு ஏ.கே.நடராசன் அவர்கள் அரசு பணியிலிருந்ததால் அவரால் முழுமூச்சாக சமுதாயப்பணியிலே ஈடுபடமுடியவில்லை. அப்போது சமுதாயப்பணியாற்றிய போராளிதான் மருத்துவர் இராமதாசு, ஏதோ திடீரென ஒரு நாள் வன்னிய சமூகம் மந்தையாடு மாதிரி அவர் பின்னால் போகவில்லை. ஒரு நல்ல அற்பணிப்புள்ள தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருந்தபோது மருத்துவரின் போராட்டகுணம், அற்பணிப்பை கண்டு மனமுவந்து ஏற்றுக்கொண்டது வன்னிய சமூகம். மருத்துவர் இராமதாசு அவர்கள் அரசியல் சமூக வாழ்வில் எத்தனை கூட்டங்கள், எத்தனை கிராமங்களிலே சுற்றுப்பயனம் செய்தார், எத்தனை கல்லடிகள், எத்தனை தலைமறைவு இரவுகள் என்பது வெளி உலகுக்கு தெரியாது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இதுவெல்லாம் தெரியாமல் ஏதோ அவர் திடீரென அதிட்(ஷ்)டத்தினால் தலைவரானது போல் எண்ணிக்கொண்டு பொறாமையால் அவரை தாக்குகின்றனர்.இனி அடுத்த கட்டத்திற்கு வருவோம்,1987 அது வன்னிய சமூகத்திற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு,வன்னிய சமுதாயத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. இதுவரை தமிழகம் சந்திக்காத போராட்டத்தை வன்னிய சமுதாயத்தினால் சந்(சா)தித்தது. ஒருவார மறியல் போராட்டம், தமிழக தலைநகர் தென்மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது, வட மாவட்டம் முழுவதும் வாகனப்போக்குவரத்து இல்லை. இதில் நானும்தான் பாதிக்கப்பட்டேன் ஏழாவது படிக்கின்றபோது 4 கிலோமீட்டர்கள் நடந்து பள்ளிக்கு சென்றேன். அப்போது கூட எனக்கு கோபம் வரவில்லை என் சமூகத்துக்காக ஏதோ நடக்கிறது எனவே இந்த வலியை பொறுத்துக்கொள்ளவேண்டும் என தான் எண்ணினேன்.நமது அதிகார அமைப்பு எப்போதுமே ஒரு பிரச்சினை பெரிதானப்பின் தான் நடவடிக்கை எடுக்கும் அதுவரை வீம்புக்காக சூழ்நிலை கட்டுக்குள் இருப்பதைப்போல் காட்டிக்கொள்ளும். ஒரு வார மறியல் போராட்டம் ஏதோ திடீரென நடத்தப்படவில்லை, பல மாதங்களுக்குமுன் கோரிக்கை வைத்து அறிவிப்பு கொடுத்து, பல இடங்களில் பல முறை குடும்பத்தோடு ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என எல்லா போராட்டங்களும் அமைதியான முறையில் செய்து பின்தான் நடை பெற்றது இந்த சாலை மறியல் போராட்டம். முக்கிய முதல் நிலை தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், இதனால் போராட்டம் பிசு பிசுக்கும் என அரசாங்கமும் காவல்துறையும் நினைத்தது. ஆனால் அன்றைய கட்டத்திலே முதல் நிலை தலைவர்களின் வழிகாட்டிதல் படி இரண்டாம் நிலைத்தலைவர்களால் நடத்தப்பட்டது. இரண்டாம் நிலைத்தலைவர்களை கைது செய்ய முனைந்தபோது பலர் தலைமறைவு. சாலை மறியலுக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன, அதனால் இன்று வரை மரங்கள் வெட்டி வீசப்பட்டதை மரம்வெட்டி கும்பல் என நக்கல் அடிக்கப்பட்டு வரப்படுகின்றது, ஆனால் இந்த மரங்கள் யாருடைய மரங்கள்? அந்த மரங்கள் எல்லாம் அவர்கள் மற்றும் அவர்களின் தாய்,தந்தை, முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களே, மற்ற எல்லோரையும் விட அந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு அந்த மரங்களை வளர்த்த அந்த மக்கள் தான் வருத்தப்படுவர், ஆனால் அதையும் மீறி அவர்களுக்கு தேவை இருந்தது. (பசுமைதாயகம் அமைப்பு பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அதை மரங்களாகவும் ஆக்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது, ஆனால் மதத்தின் பெயரால் வட மாநிலங்களிலே வெட்டி வீழ்த்தப்பட்ட மனித உயிர்களை மதம் சார்ந்த அமைப்புகளும், கட்சியும் எப்படி பிராயச்சித்தம் தேடப்போகின்றன?)முதல் இரண்டு நாட்களிலேயே போராட்டத்தின் போக்கு புரிந்துவிட்டது. பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பமில்லை, வன்னிய இனத்தோர் மீதும், வன்னிய கிராமங்களின் மீது மாபெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது, அது இதுவரை யாராலும், ஏன் வன்னிய இனத்தோரால் கூட இந்த உலகிற்கு சொல்லப்படவில்லை துப்பாக்கி சூட்டில் பல வன்னியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டு தியாகியாயினர் அப்போதும் கூட போராட்டம் கட்டுக்கு வரவில்லை.போராட்டத்தை கட்டுக்கு கொண்டுவர ஒரே வழி கலவரம் தான், அதுவரை தலித் மக்கள் போராட்டத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்,அவ்வப்போது சிறு சிறு உரசல்கள் இருந்தன.அப்போதுதான் காவல்துறையால் தலித் மக்கள் தூண்டப்பட்டு நேரடிமோதல்கள் நடந்தன. எப்படி வன்னியர்களின் மறியல் போராட்டத்தை தலித் மக்களை தூண்டுவதன் மூலம் முறியடிக்க முயற்சி செய்தனர் என்பதைப்பற்றி விரிவாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி அவருடைய பணிக்கால சாதனைகள் பற்றி குமுதத்தில் தொடராக எழுதியதில் விவரித்துள்ளார். இதனால் வட மாவட்டங்களில் ஒரு பத்து ஆண்டுகள் சாதித்தீ எரிந்து இப்போது ஒரு எட்டு ஆண்டுகளாகத்தான் அமைதியாக உள்ளது.ஆனால் எதுவுமே மறியல் போராட்டத்தை தோல்வியுறச்செய்யவில்லை. பின் அரசாங்கம் மிகப்பிற்பட்ட மற்றும் அட்டவணை பட்டியல் என ஒரு பிரிவை உருவாக்கி இட ஒதுக்கீடும் அளித்தது.ஒரு சிறு இடைச்செருகல், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்று பலர் விமர்சிக்கின்றனர் தி.மு.க. ஆட்சி பீடம் ஏறவேண்டுமென இப்போராட்டம் நடத்தப்பட்டது என பலர் இன்று விமர்சிக்கின்றனர், ஆனால் 1987ல் நடந்த இப்போராட்டம் இராமதாசு அவர்களின் சுய நலத்துக்காக நடைபெற்றது என யாரும் விமர்சிக்கவில்லை, ஏன் அவரை கடுமையாக எதிர்க்கும் சில வன்னிய இனத்தலைவர்கள் கூட இந்த போராட்டத்தை விமர்சித்ததில்லை, ஏனெனில் இது வன்னிய சமுதாயத்துக்காக நடத்தப்பட்டது, தனி மனிதனுக்காகவோ (அ) அல்லது குறிப்பிட்ட மனிதர்களுக்காகவோ நடத்தப்பட்டது அல்ல.பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் அடுத்தப்பதிவில் தொடரும்...இதே தலைப்பின் அடுத்தப்குதிக்கான சுட்டி மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2